ஊடகத்தில் படம் காட்டாமல் நாம் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்கவுக்கு பகிரங்க சவால் விடுவதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கதரகம பகுதியில் தனது சகோதரர் மூலம் பார் பேர்மிட் பெற்றதாக வசந்த சமரசிங்க பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அது அப்பட்டமான பொய் எனக்கோ எனது குடும்பத்தினரக்கோ பார் பேர்மிட் இல்லை.
தற்போது உங்கள் ஜனாதிபதி,பிரதமர் உள்ளார்கள் ,உங்களது அரசு உள்ளது ஊடகத்தில் வந்து படம் கட்டாமல் நாம் தவறு செய்திருந்தால் எம்மை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள். எதிர்கட்சி அரசியலை ஆளும் கட்சியில் இருந்து செய்யவேண்டாம் என அவர் கூறினார்.
Monday, September 30, 2024
ஊடகத்தில் படம் காட்டாமல் நாம் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »