தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஒன்பத மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் நாளைய தினம் பரீட்சை நிலையங்களைச் சுற்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு பேனா பயன்படுத்தினால் கருப்பு அல்லது நீல நிற பேனாவையே பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு நிறங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பென்சிலை பயன்படுத்தினால் அதற்கு தடையில்லை எனவும், பென்சிலால் எழுதும் பிள்ளைகள் சில பென்சில்களை எடுத்து வருமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்வு மையத்திற்கு அழிப்பான், மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் கோப்பு அட்டைகளை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Saturday, September 14, 2024
ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் - பரீட்சைகள் ஆணையாளர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »