Our Feeds


Saturday, September 21, 2024

Sri Lanka

துபாய் செல்ல முற்பட்ட டான் பிரியசாத்தை திருப்பியனுப்பிய விமான நிலைய அதிகாரிகள். - நடந்தது என்ன?



துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த டான் பிரியசாத் நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார்.


அவருக்கு எதிராக வெளிநாட்டு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.


லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு 08.35 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவையின் EK-653 விமானத்தில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


09 மே 2022 அன்று கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6வது குற்றவாளியாக டான் பிரியசாத் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »