Our Feeds


Wednesday, September 11, 2024

SHAHNI RAMEES

இன்று தொடங்கியது டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையேயான நேரடி விவாதம்!

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் புதன்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது.



பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில் இந்த தேர்தல் விவாதம் நடைபெற்ற் வருகிறது.



அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்



குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நடைபெற இருக்கிறது.



இந்த விவாதத்தில் அமெரிக்க பொருளாதாரம் பற்றி சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.



முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மோசமான குடியேற்றத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட், அதனால் அவரிடம் அமெரிக்காவுக்கு வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லை.



கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டு அமெரிக்காவுக்கான சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். ஜோ பைடனின் தவறான கொள்கைகளை கமலா ஹாரிஸும் பின்பற்றி வருகிறார். பைடன் ஆட்சி காலத்தில் அமெரிக்க கடுமான அளவில் பணவீக்கத்தால் பாதித்தது. அமெரிக்காவில் சட்டவிரோத ஆட்சி அதிகரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஒரு காரணமாக இருக்கிறார்.



பணவீக்கம்



எனது ஆட்சிக் காலத்தில் 21 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 60, 70-லிருந்து முன்பிருந்ததைவிட 80 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது. சிறைகள், மனநல மையங்களில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். வந்தவர்கள் அமெரிக்க- ஆபிரிக்கர்களின் வேலைகளை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.



இதனால் தொழிற்சங்கங்கள் விரைவில் பாதிக்கப்படும். அமெரிக்கா முழுவதிலும் உள்ள நகரங்களில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் நம்முடைய வீடுகளைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நம் நாட்டை அழித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரத்தை நான் உருவாக்கினேன். அதை மீண்டும் செய்வேன். அதிக வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெறுவேன்.



கருக்கலைப்பு



கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆட்சியில் 9 மாதங்களிலும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர். எனது நிலைப்பாடு கருக்கலைப்புக்கு எதிரானது என்றாலும் மக்களின் கருத்துபடி செயல்படுவேன்.

கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகும். நான் ஆட்சியில் இருந்திருந்தால் காஸாவில் போர் நடந்திருக்காது.



கமலா ஹாரிஸ்



வர்த்தகப் போரை அறிமுகப்படுத்தியவர் டிரம்ப். சீனாவின் ஆயுத வலிமைக்கு டிரம்பு உதவி செய்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிப்களை டிரம்ப் சீனாவுக்கு விற்பனை செய்தார். டிரம்ப் அரசில் பணக்காரர்களுக்கு உதவியாக அதிகளவில் வரிச்சலுகை கொடுத்ததே தவிர நடுத்தர மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.



நெருக்கடியான காலத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு திறமையான, சரியான தலைவர் தேவை. மக்கள் பிரச்னைகள் குறித்து டிரம்ப் ஒருபோதும் பேசமாட்டார். மக்களுக்காக நான் பேசுகிறேனா..இல்லையா? என்பதை எனது பிரசாரப் பொதுக் கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும்.



டிரம்பே குற்றவாளி தான் அவர் குற்றவாளிகள் குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிவிடுவார்.



டிரம்ப் எந்தச் சூழலில் அமெரிக்க ஜனாதிபதியாகி விடக்கூடாது. நாடு முழுவதும் வன்முறை நடந்த போது அதைக் கைக் கட்டி வேடிக்கை பார்த்தவர் டிரம்ப். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டுவந்துவிடுவார். உலகத் தலைவர்கள் டிரம்பை பார்த்து சிரிக்கின்றனர்.



கடந்த ஜூன் 27 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்துக்குப் பிறகு ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »