Our Feeds


Tuesday, September 10, 2024

Zameera

விசா பிரச்சினைத் தீர்விற்கு "வருகை விசா" வழங்கப்படும் - பொது பாதுகாப்பு அமைச்சர்

விசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை விசா (on arrival visa) வழங்கும் முறை அமுல்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்காக விமான நிலையத்தில் விசா கவுண்டர்கள் 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் பல விமானங்கள் வரும்போது, ​​விசா வழங்கப்படும் கவுன்டர்களில் வரிசைகள் இருப்பதாகவும், இந்த நிலையை குறைக்க, தற்போதுள்ள கவுன்ட்டர்களுக்கு மேலதிகமாக 12 கவுன்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »