Our Feeds


Monday, September 30, 2024

Zameera

பல அரச நிறுவனங்கள் கலைக்கப்பட உள்ளன


 இலங்கை திரிபோஷ நிறுவனம் உட்பட பல அரச நிறுவனங்களை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கீழ் நிர்வகிக்கப்படும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு தொடர்பான நோக்கங்களுக்கு அமைய, விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,  இலங்கை திரிபோஷ நிறுவனம், இலங்கை பத்திரிகை பயிற்சி நிறுவனம், சிறுவர் பாதுகாப்பு தேசிய அறக்கட்டளை நிதியம் மற்றும் திறைசேரி செயலாளருக்கு சொந்தமான நிறுவனங்கள், குறைவான செயல்திறன் கொண்ட நிறுவனங்கள் அல்லது பயன்படுத்தப்படாத சொத்துகள் சட்டத்தின் மறுமலர்ச்சி (அகற்றுதல்) சட்டத்தின் கீழ் கலைக்கப்பட உள்ளன.

கலைக்கப்படவுள்ள அல்லது ஏனைய நிறுவனங்களுடன் இணைக்கப்படவுள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »