தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
"ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்" என்று அமைச்சர் அலஸ் கூறினார்.