மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.