இந்த நாட்டில் உள்ள மலையக பெருந்தோட்டமக்கள் தேசிய இனப்பிரிவிற்கு உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகே தெரிவித்தார்.
இராகலை பகுதியில் இன்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களை இனப்பிரிவிற்கு உள்வாங்கப்பட்டால் மாத்திரமே இந்த மக்களின் சுதந்திரத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் மலையக மக்களுக்கு சுயதொழிலை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.
தொண்டமான் இன்று ரணில் பக்கம் திகாம்பரம் சஜித் பக்கம் வடிவேல் சுரேஷ் யார் பக்கம் இருப்பார் என்று கூறமுடியாது ஏன் என்றால் இன்று ஒருவர் பக்கம் நாளை ஒருவர் பக்கம் நாளை மறுதினம் வேறு ஒருவர் பக்கம் சென்று விடுவார் இது போன்ற தலைமைகள் தான் மலையகத்தில் காணப்படுகிறது.
மக்களுடைய தேவைக்கேற்றவாறு மலையக தலைவர்கள் செயற்படுவதில்லை தலைவர்களுக்கு ஏற்றவாறு மக்களை தன்வசபடுத்தி கொள்வார்கள் மலையக தலைவர்கள் ஜந்து கோடி ஆறு கோடி பெறுமதியான வாகனங்களில் பயணிக்கிறார்கள் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயினை அதிகரித்து கொள்ள மக்கள் பாரிய கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடும் வெயிலிலும் மழையில் தமது பணிகளை முன்னெடுக்கும் போது ஆண் தொழிலாளியா அல்லது பெண் தொழிலாளிய என இனங்கண்டு கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் தொழில் புரிந்து கொண்டு லயன் குடியிருப்புகளில் மலையக மக்கள் அன்றாட வாழ்க்கையினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மலையக மக்களின் 200ஆவது வருடத்தை கொண்டாட தென்னிந்தியாவில் இருந்து சினிமா நடிகர்களை அழைத்து வருகிறார்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கீழ் பணிபுரியும் சகோதரர் ஒருவர் என்னை சந்திப்பதற்கு வந்தார் தொழிற்சங்களுக்கு முடியும் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்தோடு ஒப்பந்த நடவடிக்கையில் ஈடுபட முடியும் இந்த ஒப்பந்தத்தில் தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் 05 தொழிற்சங்கங்களோடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பாக தோட்டபகுதியில் பணிபுரிக்கின்ற சகோதரர்களுக்கு தெரியாது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதான பிரச்சினையாக நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.
200 வருடங்களாக காணப்படுகின்ற பிரச்சினைக்கு இன்னும் தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாதமைக்கு காரணம் என்ன நிரந்த முகவரி வீட்டுரிமை மற்றும் ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வருடக்கணக்கில் போராடிய சமூகமாகவே காணப்படுகிறது.
பாடசாலை, வைத்தியசாலை இல்லாத ஒரு சமூகம் ஏனேனில், தூசி அளவிற்கு கூட இந்த சமூகத்தை இவர்கள் கண்டு கொள்வதில்லை தேயிலை உற்பத்தியினை எடுத்துக்கொண்டால் இரண்டு மில்லியன் டொலர் அபிவிருத்திக்காக கொண்டுவரப்படுகிறது.
ஜ.எம்.எப். ஊடாக எமக்கு ஒரு மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளது இந்த ஒரு மில்லியன் டொலருக்கு அவர்கள் கோரியுள்ள ஒப்பந்தங்களை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகியோர் தயாரக உள்ளனர் மக்களுக்கு தேவையானவற்றை கோரினால் அதனை கொண்டுவர இவர்கள் தயாராக இல்லை என்றார்.
Wednesday, September 18, 2024
மலையக மக்கள் தேசிய இனப்பிரிவிற்குள் உள்ளடக்கப்பட வேண்டும் - நுவான் போபகே!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »