ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஊழலிற்கு உதவினார் என தெரிந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரருக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தின் பாரிய மோசடிகள் தொடர்பில்சட்ட நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ள சஜித்பிரேமதாச குற்றங்களிற்கு தற்போதைய ஜனாதிபதி உதவினார் துணைபோனார் என தெரியவந்தால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க போன்ற ஒருவர் ஊழலிற்கு உதவினார் என தெரியவந்தால் என்பது உறுதியானால் நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு 100 வீதம் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறிமோசடி போன்ற பொதுமக்களாலும் அரசியல்அரங்கிலும் பேசப்படும் மோசடிகள் குறித்தும் விஎஸ்எவ் விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு தனது கட்சி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பவர்கள் போல இல்லாமல் நாங்கள் ஊழலை ஒழிப்பது குறித்து உண்மையான ஆர்வத்தை கொண்டுள்ளோம்,என அவர் தெரிவித்துள்ளார்.
Wednesday, September 18, 2024
ரணிலுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை - சஜித்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »