Our Feeds


Tuesday, September 17, 2024

Zameera

அரகலய காணொளிகளைப் பகிர்ந்தால் சிக்கல்


 அரசியல் ஆதாயத்திற்காக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது வன்முறை நிகழ்வுகள் தொடர்பான தவறான காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பெலிஸ் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வாகன சோதனைகள் மற்றும் 2022 மே 9 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காட்சிகள் என தீவின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வீடியோக்கள் கடந்த கால நிகழ்வுகளை நடப்பு நிகழ்வுகளாக காட்டி தவறான கதையை உருவாக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதுபோன்ற உறுதியற்ற வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »