Our Feeds


Friday, September 27, 2024

Zameera

மண்சரிவு அபாயம்: நோட்டன் பிரிட்ஜ், விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயம் மூடப்பட்டது


 மண்சரிவு அபாயம் காரணமாக நோட்டன் பிரிட்ஜ், விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

குறித்த பாடசாலைக்கு அருகில் அண்மையில் பாறைகள் சரிந்து வீழ்ந்ததாலும் பாடசாலைக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் வெடிப்புக்கள் உள்ளதாலும் மண்சரிவு ஏற்படும் அபாயமிருப்பதால்  இவ்வாறு பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதிபர் சுவந்தி மலானி குமாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

வலயப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து பாடசாலையை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அவரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »