Our Feeds


Monday, September 2, 2024

Zameera

விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு : இரண்டு மாத காலத்திற்கு


 ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு நேற்று முதல் இரண்டு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று செப்டம்பர் 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை 02 மாதம் பொது மன்னிப்பு காலத்தை வழங்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்கள், சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமன்னிப்புக் காலப்பகுதியில் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையருக்கு தூதரக சேவைகளை வழங்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இப்பொதுமன்னிப்பு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக பயண ஆவணங்களை இலங்கையிடம் கோருவரென எதிர்பார்க்கப்படுவதாக டுபாயிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தின் போது, ​​ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர், உரிய வீசாவை சட்டரீதியாக தயார் செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவர்களைக் கோரியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தால், தமக்கு அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »