இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 283 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 319 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 183 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Monday, September 30, 2024
எரிபொருள்களின் விலை குறைப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »