பொஹட்டுவவின் வெற்றி 21ம் திகதி உறுதி என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று (31) மாலை காலி, வந்துரப பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சட்டத்தையும் நாட்டில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன் என்றார்.
அந்த செயற்பாடுகளை தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் கட்சியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.
இதையெல்லாம் செய்ய நீண்ட கால திட்டம் தேவை.
ஆயுதப்படை, காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் நலனை உறுதி செய்ய முறையான வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.