Our Feeds


Sunday, September 29, 2024

Sri Lanka

தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக உதயநிதி!



தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.


துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும்,

நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும்,

சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும்,

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும்,

வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும்,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »