ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 30ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கொழும்பு மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு நிலையம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்