ரியாத்தில் நடைபெறும் உலக செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு: பங்கேற்பாளர்கள், ஆராய்ச்சிகள் மற்றும் நிகழ்வின் முக்கிய தகவல்கள்
அறிமுகம்:
கடந்த (10-09-2024) செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், செயற்கை நுண்ணறிவுக்கான மூன்றாவது சர்வதேச மாநாடு பட்டத்து இளவரசரும் பிரதமருமான, முஹம்மத் பின் ஸல்மான் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இதில் 100 நாடுகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர். இவ்வுச்சிமாநாடு (Global AI Summit) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய முக்கிய கலந்துரையாடல்களைக் கொண்ட உலகளாவிய நிகழ்வாகும். இந்த மாநாடு, சவூதி அரசின் தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் ((SDAIA) நடத்துகிறது, மேலும் அரசத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள், மற்றும் உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் முக்கிய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்:
1. மாநாடு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-12 வரை நடைபெறுகிறது.
2. இது சவூதி அரேபியாவின் SDAIA மற்றும் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களின் ஒத்துழைப்பில் நடத்தப்படுகிறது.
3. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர், இதில் அரச அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், மற்றும் கல்வியாளர்கள் அடங்குவர்.
4. இம்மாநாட்டில் 90க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன, மிக விஷேடமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், சீனா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகங்கள், இந்தியா போன்ற நாடுகள் இந்த உச்சிமாநாட்டில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன.
5. Google, Amazon, Microsoft, Tesla போன்ற நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள், மற்றும் MIT, Stanford போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள் இதில் பேசுகிறார்கள்.
6. இம்மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஆவணங்கள் சமர்பிக்கப்படவுள்ளன.
ஆவற்றில் உள்ள சில முக்கிய தலைப்புக்கள்:
சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு.
போக்குவரத்து மற்றும் நவீன நகரங்கள் மேம்பாட்டில் AI யின் பங்கு.
பாதுகாப்பு மற்றும் ராணுவ துறைகளில் AI யின் பயன்பாடு.
செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகள் மற்றும் தனியுரிமை சிக்கல்கள்.
7. மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட பணிமனைகள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் பேசப்படும் சில முக்கிய அம்சங்கள்:
தொழில்முனைவோர்கள் மற்றும் புதுமை நிறுவனங்களுக்கு AI தீர்வுகளை உருவாக்குவது.
செயற்கை நுண்ணறிவின் மூலம் நிலைத்த வளர்ச்சியை எவ்வாறு அடையலாம் என்பதை ஆராய்வது.
AI யின் நெறிமுறைகளுக்கான சவால்களை விவாதிப்பது.
8.எதிர்கால வளர்ச்சி: உலகளாவிய அளவில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கான திட்டங்களை இந்த உச்சிமாநாடு அமைக்கும், மேலும் AIயின் நிலையான மற்றும் பாதுகாப்பான பயன்பாடுகளை முன்னேற்ற உதவும்.
எதிர்பார்ப்புகள்:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின் மூலம் செயற்கை நுண்ணறிவில் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் பல்வேறு உடன்படிக்கைகளில் கைசாத்திடல்.
உலகளாவிய அளவில் AI யின் பொறுப்பான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடல்.
கலாநிதி M.H.M அஸ்ஹர்