ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு நிறைவு விழா கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் சிறிகொத்தவில் இன்று (06) நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் கோலாகலமான வைபவம் நடத்துவதற்கு கட்சியின் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.