Our Feeds


Thursday, September 12, 2024

SHAHNI RAMEES

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 77% விநியோகிக்கப்பட்டுள்ளன..!

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் ஒரு இலட்சத்து முப்பத்திரண்டு இலட்சம் உத்தியோகபூர்வ தேர்தல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

நாளையும் நாளை மறுதினமும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்தார்.

சனிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் கிடைக்காவிட்டால், 18ஆம் திகதிக்கு பின்னர் தமது பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை சரிபார்த்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »