Our Feeds


Tuesday, September 3, 2024

Zameera

7,500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு பயிற்சி

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அறிவியல் துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் அறிவிப்புக்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, 

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »