Our Feeds


Thursday, September 26, 2024

Zameera

இலஞ்சம் பெற்ற 2 விசேட புலனாய்வு அதிகாரிகள் கைது




 மட்டு கொக்கட்டிச்சோலையில் மண் வியாபாரியிடம் 2 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது செய்யப்பட்ட இரு விசேட புலனாய்வு பிரிவினர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரையம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.


கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர். மணல் வியாபாரி ஒருவரிடம் நீண்ட நாட்களாக பணம் வாங்கிவந்துள்ள நிலையில் குறித்த மண்வியாபாரி இது தொடர்பாக கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று புதன்கிழமை (25) பிற்பகல் கொக்கட்டிச்சோலை நகர்பகுதியில் உள்ள வீதியில்; மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழுப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதன் போது அங்கு சென்ற விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் குறித்த மண் வியாபாரியிடம் இலஞ்சமாக 2 ஆயிரம் ரூபாவை  வாங்கும் போது மாறுவேடத்தில் இருந்தவர்கள் புலனாய்வு பிரிவினரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.


இதில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட புலானர்வு பிரிவைச் சேர்ந்த சாஜன் ஒருவரும் கொஸ்தாப்பல் ஒருவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இருவரையம் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.;


(கனகராசா சரவணன்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »