கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டக்கச்சி, பன்னங்கண்டி பாலத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த அல்பிரட் அனுசன் (வயது 22) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனம் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் சாரதியைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.