Our Feeds


Thursday, September 12, 2024

Zameera

14 லட்சத்தை அண்மித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை


 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது.

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், அதன் எண்ணிக்கை 218,350 ஆகும்.

மேலும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குழு வந்துள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,487,303 ஆகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »