இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் நேற்று வியாழக்கிழமை (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்ட யூரி தோட்டம் தொழிற்சாலை பிரிவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக முறையில் பசறை உடகம பரகாகந்தூர பகுதியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்ட போது குறித்த 11 நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் கல் உடைக்கும் இயந்திரம் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E. M. பியரட்ண தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.