Our Feeds


Wednesday, September 11, 2024

Sri Lanka

நாமல் ராஜபக்ஷவின் அடுத்த 10 வருடத்திற்கான திட்டம் இதுதான்.



அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,


"உங்கள் பிள்ளைகள் கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் நிற்காமல், அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் பெற இளைஞர்கள் வரிசையில் நிற்கும் காலகட்டம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில். உண்மையான வரிசையை அகற்றும் அளவிற்கு நமது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றி வருகிறோம். மோசடி மற்றும் ஊழலை இந்த மேடையில் இருந்து நாங்கள் அகற்றுவோம். 


தொழில்நுட்பம் ஊடாக வெளிப்படைத்தன்மை மற்றும் தரமான பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் கொடுக்கல் வாங்கல்களை சர்வதேசத்துடன் மேற்கொள்கிறோம். 


இந்த நாட்டின் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் அதனை கையாள்கின்றோம். அது தகவல் தொழில்நுட்பத் துறையாக இருக்கலாம், முதலீடு மற்றும் உற்பத்தித் துறையாக இருக்கலாம், சேவைத் துறையாக இருக்கலாம், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைகளாக இருக்கலாம், அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் குழந்தைக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »