நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுஜன
பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்வைப்பதற்கு எதிராகவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையிலான நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் உயர் செயற்பாட்டு மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் (03) உடன்பாடு தெரிவித்துள்ளனர் .
இன்று ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய எஸ்.பி.திஸாநாயக்க,ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் 100 வீதமானவர்கள் கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக ரணிலை ஆதரிப்போம் என்று தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பாதவர்கள் கைகளை உயர்த்துமாறு கேட்டபோது எவரும் கையை உயர்த்தாததையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது.
ஆர்.எப்.எம்.சுஹெல்