அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வேலையை நாடு முழுவதும் செய்து வரும் அஇமக வின் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான குருநாகல மாவட்ட மக்கள் சந்திப்பு கடந்த 04.08.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.
குருநாகல் மாவட்ட பள்ளிவாயல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ரிஷாத் பதியுத்தீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பதாக புத்தளத்தில் அஇமக வின் தேசிய மாநாடு ஒன்றும் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்த நிலையில் குருநாகல் மாவட்ட மக்கள் சந்திப்பும் வெற்றியளித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நாடு முன்னோக்கியுள்ளதுடன், அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தலும் வரவுள்ள தற்போதைய நிலையில் ரிஷாத் பதியுத்தீனுக்கு முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.