ஹக்கீம், ரிஷாத் வேண்டாம் - பொத்துவில்
முழுதும் எதிர்ப்பு போஸ்டர்அக்குரனையில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த மு.க தலைவருக்கு ஊர் மக்கள் பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அக்குரணை வெள்ளத்திற்க்கு தீர்வு தருவதாக கூறி கடந்த 15 வருடங்களாக ஏமாற்றி வருவதாக கூறியே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று பொத்துவில் நகருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்க்கு ஹக்கீம் செல்லவுள்ள நிலையில் “ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்” எனும் வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பொத்துவில் மண் மலை பிரச்சினை, முஹுந்து விகாரை பிரச்சினை மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் என கொடுத்த வாக்குறுகள் எதுவும் குறித்த தலைவர்களால் நிறைவேற்றப்படவில்லை. என்பதே பொத்துவில் பகுதி மக்களின் எதிர்ப்புக்கு காரனமாக சொல்லப்படுகிறது.