கொரோனா பெருந்தொற்று நேரத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் மகன் அமான் அஷ்ரப் அவர்களினால் தயாரிக்கப்பட்ட “ஓட்டமாவடி” திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த திரைப்படத்தின் கதையாக்கம் தற்போது புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
“ஓட்டமாவடி” புத்தக வெளியீட்டு நிகழ்வு கடந்த 12ம் திகதி திங்கள் கிழமை கொழும்பில் நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன், சிங்கள பெரும்பான்மை சகோதரர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.