ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் JVP தலைமையிலான NPP - தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆதரவு நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில் “அனுர நல்லா பேசுவார்” என்று கூறி விட்டு கடந்து சென்றவர்களெல்லாம் “அனைவரும் திருடர்கள் ஒரு முறையாவது அனுரவுக்கு கொடுத்துப் பார்ப்போம்” என்ற மனநிலைக்கு வந்துள்ளதை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது.
கல்வியலாளர்கள் மத்தியில் மட்டுமன்றி சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் இந்நிலை பாரியளவில் வியாபித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் தான் இன்றைய தினம் கொழும்பு, மாளிகாவத்தை, பி.டி சிரிசேன மைதானத்தில் “ஆசிரியர்களுக்கான மாபெரும் தேசிய மாநாட்டை” தேசிய மக்கள் சக்தி நடத்தியிருந்தது. காலை 10 மணிமுதல் 2 மணி வரை நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றமை மற்ற கட்சியினர் மத்தியில் அதிர்சியை உண்டாக்கியுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பெருகி வரும் நிலையில் சஜித் தலைமையிலான SJB மற்றும் ரனில் தலைமையிலான குழுவினரும் தமது பிரச்சாரங்களை பாரிய அளவில் முன்னெடுத்து வருகின்றனர்.