காலி, ஹிரும்புலவில் அமைந்துள்ள வரலாற்று பாரம்பரியம் மிக்க “இப்னு அப்பாஸ் அரபு இஸ்லாமிய கலாசாலை”யின் 6வது பட்டமளிப்பு நிகழ்வு கடந்த 03.08.2024 சனிக்கிழமை பிரபல மார்க்க அறிஞர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு ஆரம்பித்த குறித்த நிகழ்வில் 61 உலமாக்கள் பட்டம் பெற்றுக் கொண்டதுடன், 29 பேர் ஹாபிழ்களாக பட்டம் பெற்றுக் கொண்டமை சிறப்புக்குறியதாகும்.
கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பத்ஹூர் ரஹ்மான் பஹ்ஜி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சவுதி அரேபிய நஜ்ரான் பல்கலைக் கழக ஹதீஸ் துறை மற்றும் ஷரீஆ பீட பேராசிரியர் கலாநிதி UL அஹ்மத் அஷ்ரப் அல்-அஸ்ஹரி அவர்கள் கலந்து கொண்டதுடன், பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் ஜிப்ரி, அல்-பயான் அரபு இல்லாமிய கலாபீடத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஸரூக் அல்-ஹஸனி, அஷ்ஷெய்க் தாசிம் கபூரி உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கல்லூரியின் ஆசிரியர் குலாமின் சீரிய வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு கல்லூரி வரலாற்றின் மிக முக்கியமான அங்கமாக பதிவானமை குறிப்பிடத் தக்கதாகும்.
தென்மாவட்டங்களில் இஸ்லாமிய பிரச்சாரத்தின் அச்சாணிகளில் ஒன்றாக திகழும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி நாடு முழுவதும் தூய இஸ்லாமிய பணியாற்றும் நூற்றுக் கணக்கான ஆலிம்களை உருவாக்கிய ஒரு முக்கிய கல்லூரியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.