"இந்த நாட்டை கட்டியெழுப்புவது பெரிய காரியம் அல்லவென சிலர் கூறுகிறார்கள். ஐந்து வருடத்தில் இந்தியாவை மிஞ்சிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகக் கூறும் தலைவர்கள் நாட்டில் நெருக்கடி வந்த காலத்தில் எங்கிருந்தனர்?
இப்போது இலங்கையில் பல சூப்பர் மேன்கள் உள்ளனர். ஆனால் இலங்கையின் "வன் மேன்'' என்று ரணில் விக்ரமசிங்கவை மட்டுமே சொல்ல முடியும். அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்திய தலைவராகவும் அவரே உள்ளார். நாடும் நாட்டு மக்களின் பிள்ளைகளும் முன்னேறும் அதேநேரம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியமானது.
சிலிண்டர் பற்றி பலரும் பல விடயங்களைக் கூறுகிறார்கள். ஆனால் அதனை மிஞ்சிய சின்னம் கிடைக்காது. அதனைக் கண்டவுடன் கடந்த இரு வருடங்களில் பட்ட கஷ்டங்கள் நினைவில் வர வேண்டும். பசியில் வாடிய மக்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்கக் கூடாது.
சஜித் பிரமேதாசவின் சின்னம் பழைய தொலைபேசி. இலங்கைக்கு புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இன்று திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவோர் திசைகாட்டியை இயக்கவும் ரணில் விக்ரமசிங்க இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இணைய வசதி தேவை என்பதை மறந்துவிடக்கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.
Sunday, August 18, 2024
பசியில் வாடிய மக்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த தலைவர் ரணில் விக்ரமசிங்க - ஹரீன் MP
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »