‘‘சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் என்று நாட்டு மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான கருத்தாக இருக்கவில்லை என்பது எமக்குத் தெரியும்’’ என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறான கலந்துரையாடலாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்குத் தயார் எனவும் அவர் நேற்று (27) வெளியிட் டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ஒப்பந்தம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ள தான் தயார் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட தரப்பினருக்கு இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டுமென்று 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே தெரிவித்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாக்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறது.
அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண மக்களைப் பாதிக்கின்ற நிபந்தனைகள் குறித்தும் அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளை முன்வைத் திருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் என்று நாட்டு மக்களை அழுத்தங்களுக்குள்ளாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான கருத்தாக இருக்கவில்லை என்பது எமக்குத் தெரியும்.
எனவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறான கலந்துரையாடலாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்குத் தயார் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என்றார்.
Wednesday, August 28, 2024
IMF நிபந்தனைகள் குறித்து மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்குகிறார் ஜனாதிபதி - ரஞ்சித் மத்தும பண்டார!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »