Our Feeds


Thursday, August 8, 2024

SHAHNI RAMEES

BREAKING: பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார் முகமது யூனுஸ்.

 

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.



பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.



இதனால் இடைக்கால அரசு அமையும் என பங்களாதேஷ் இராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.



இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. பங்களாதேஷ் வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.



சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம், மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »