மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்ததை சட்டத்தரணி பைசர் முஸ்தபா எமது செய்தியாளரிடம் உறுதிப்படுத்தினார்.
செப்டெம்பர் 4 ஆம் திகதிவரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும்.
மேற்படி ஆசிரிய உதவியாளர் நியமன ஏற்பாடுகள் முறையாக நடக்கவில்லை என்பதாக தெரிவித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.