ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சின்னம் தங்களது கட்சிக்குச் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தங்களது ஜன அரகலய புரவெசியோ கட்சிக்கு உரியது எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது அமைப்புக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய அந்தச் சின்னத்தை மீளப்பெறுமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.
Sunday, August 18, 2024
பறிபோகுமா ரணிலின் சிலிண்டர் சின்னம்?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »