அஞ்சல் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் அஞ்சல் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
இந்தப் பணிகளுக்கான விசேட தினமாக செப்டம்பர் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
Sunday, August 25, 2024
அஞ்சல் வாக்குச் சீட்டுகள் நாளை விநியோகம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »