Our Feeds


Wednesday, August 7, 2024

SHAHNI RAMEES

லால்காந்தவை உடன் கைது செய்ய வேண்டும் - உதய கம்மன்பில

 


இலங்கை பாராளுமன்றத்தை தேசிய மக்கள்

சக்தி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


” மக்களை பாராளுமன்றத்திற்கு வரச் சொன்னவர்கள் நாங்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் விட்டுச் சென்றதால் அதனைச் செய்ய முடியாது என லால்காந்த தெரிவித்துள்ளார். அன்று ஜே.வி.பி போராளிகளால் பாராளுமன்றத்தை கைப்பற்ற முடிந்திருந்தால் இன்று இலங்கையிலும் அதே நிலை ஏற்பட்டிருக்கும்.


இன்று பங்களாதேஷ் அராஜகமாகவும், இரத்த ஆறாகவும் மாறிவிட்டது. நாடு முழுவதும் சடலங்கள் குவிந்து கிடக்கிறன அவ்வாறானதொரு நிலையை உருவாக்கவே தான் அங்கு இருந்ததாக லால்காந்த கூறுகிறார்”.


அநுரவுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் சட்டத்தை இப்போதே அமுல்படுத்த வேண்டும். குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமே. நாடாளுமன்றத்தை கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்த தயாராகி விட்டதாக லால்காந்த தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »