அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் செயல்பாடுகளை காத்தான்குடியில் வேகமாக முன்னெடுக்கும் வகையிலான காத்தான்குடி NPP செயல்பாட்டுக் கூட்டம் நேற்று 18ம் திகதி மாலை நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரங்களை முன்னெடுப்பது பற்றிய குறித்த கலந்துரையாடலில் காத்தான்குடியின் பல பகுதிகளிலிருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கேற்றதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான முக்கிய முடிவுகளும் எட்டப்பட்டன.