தேர்தல் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள்
மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
பெரும்பாலான வேட்பாளர்கள் கொட்டகைகள் மற்றும் கூடாரங்களை அலுவலகங்களாக நடத்தி வருவதாகவும் வேட்பாளரின் சின்னம் மற்றும் படத்துடன் கூடிய பேனர் கட்அவுட்களைக் காட்டவே இதுபோன்ற கூடாரங்கள் நடத்தப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது போன்ற படங்களை அகற்ற பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார்.