Our Feeds


Wednesday, August 7, 2024

Sri Lanka

ஒற்றைக் கையுடன் பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் வீராங்கனை!


பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை அசரவைத்துள்ளார் பிரான்ஸைச் சேர்ந்த டேபள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர்.

முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த டேபள் டென்னிஸ் வீராங்கனையான புருனா அலெக்ஸாண்ட்ரே, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.

29 வயதான புருனா அலெக்ஸாண்ட்ரே, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் இரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் புருனா அலெக்ஸாண்ட்ரே பெற்றுள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸாண்ட்ரே கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.

அலெக்ஸாண்ட்ரே தன்னுடைய 7 வயதில் டேபள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், ஒரு கையால் விளையாடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஆனால், அவர் இடது கையால் பந்தை மேலே தூக்கி அடித்து பந்தை சுழல வைத்து திருப்பி அடிக்கும் திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய திறமைகளை மாற்றியமைக்க முடிந்தது. தற்போது சர்வீஸ் எனது வலிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று திறமையான ஸ்கேட்போர்ட் மற்றும் சைக்கிளிங்கிலும் திறமைபெற்ற அலெக்ஸாண்ட்ரே கூறினார்.

அலெக்ஸாண்ட்ரே ஏற்கனவே பதக்கங்களை வென்ற பராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக திங்கட்கிழமை களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.

தோல்விக்குப் பிறகு கூறும்போது, “தோல்விக்குப் பின்னர் உங்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் இருக்கிறதா? என்பதைப் பொருள்படுத்தாமல் எல்லாம் சாத்தியம் என்பதைக் காட்ட வேண்டும்” என்றும் கூறினார்.

உற்சாகமான வரவேற்புக்கு பிரான்ஸ் மக்களுக்கு நன்றி கூறிய அவர், “இன்று கனவு நனவாகி இருப்பதை நான் கொண்டாடுகிறேன். இன்னும் பல நாட்களுக்கு கொண்டாடுவேன்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »