ஜனாதிபதி தேர்தலில் சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் திலித் ஜயவீர போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வஜன சக்தியின் (சர்வஜன பலய) ஜனாதிபதி வேட்பாளராக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.