சபாநாயகர் நாடு திரும்பியதும் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விசேட சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஏலவே, பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதிமன்றத்தினூடாகவே தீர்வு காணப்படவேண்டும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாட்டுக்கு வருகை தந்தவுடன் இதுதொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றை அவருடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, August 1, 2024
பொலிஸ் மா அதிபர் சர்ச்சை சபாநாயகருடன் பேச்சுவார்த்தை - ரணில் ரணில் விக்கிரமசிங்க
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »