Our Feeds


Thursday, August 1, 2024

Sri Lanka

பிரதமர் தினேஷின் கட்சியும் ரணிலுக்கு ஆதரவு!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.

மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்தன, பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமணி குணவர்தன, பிரதிச் செயலாளர் லலித் ரோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »