ஆசிய கிண்ண செம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 ரி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டிக்காக இம்மாதம் 6 ஆம் திகதி அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
இலங்கையும் அயர்லாந்தும் இதுவரை (2007 - 2023) 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளன, மேலும் அந்த அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை (2009 - 2022) 3 ரி20 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்திலும் இலங்கையே வெற்றி பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ரி20 போட்டிகள் இம்மாதம் 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் டப்ளின் மற்றும் பெல்ஃபாஸ்டில் நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் ஒருநாள் போட்டிகள் ஆரம்பமாகி இம்மாதம் 16, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
அனைத்து போட்டிகளும் பெல்ஃபாஸ்டில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, August 2, 2024
அயர்லாந்து செல்லும் இலங்கை அணி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »