ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று படுகொலை செய்யப்பட்டதற்கு பலஸ்தீன - இலங்கை நற்புறவுச் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட நற்புறவுச் சங்கம், “ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா மீதான கோழைத்தனமான படுகொலையை பலஸ்தீன - இலங்கை நற்புறவுச் சங்கம் கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
ஹனியாவை படுகொலை செய்ததன் மூலம், காஸாவில் தனது இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வந்து போர் நிறுத்தத்திற்கு செல்ல இஸ்ரேல் தயாராக இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக கமிட்டி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பலஸ்தீன - இலங்கை நற்புறவுச் சங்கம், பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக இருப்பதாகத் தெரிவித்ததோடு, இஸ்ரேலின் விஸ்தரிப்புவாதத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பிற்கான தொடர்ச்சியான ஆதரவை மேலும் வலியுறுத்தியது.
இந்த வார ஆரம்பத்தில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.