Our Feeds


Friday, August 2, 2024

Sri Lanka

சர்வதேச அரங்கில் மடவளையின் மகன்!


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமான நிலையில் கண்டி மடவலையைச் சேர்ந்த மொஹமத் ஷிராஸ் அறிமுக வீரராக இடம்பெறுகிறார்.

இலங்கை அணியில் இடம்பெற்றுவந்த முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஐவர் உபாதை மற்றும் சுகவீனம் காரணமாக ஒய்வுபெற்றுவருவதால் மொஹமத் ஷிராஸ், ஏஷான் மாலிங்க ஆகியோர் முதல் தடவையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில் கண்டி மடவளை மதீன மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்பாது பி.ஆர்.சி.க்காக முதல்தர போட்டிகளில் விளையாடி வருபவருமான மொஹமத் ஷிராஸ், 119 முவகையான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 228 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிவருகிறது. 


அணிகள் ;

இலங்கை:
சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, அக்கில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ,மொஹமத் ஷிராஸ்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வொஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமத் சிராஜ்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »