Our Feeds


Thursday, August 1, 2024

Zameera

கடுமையான பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டை ஸ்திர நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயம்

கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடையவில்லை என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அறிவு, அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளின் அடிப்படையில் வீழ்ந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அடுத்த ஐந்து வருடங்களுக்கு அந்தத் தலைமையை தெரிவு செய்வது சரியான மற்றும் நியாயமான முடிவாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டிற்கு திருகோணமலை, பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 35 திட்டங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் தொடங்குவதால் முதலீடுகள் ஓரளவு குறையலாம் என நம்புகிறோம். ஆனால் இது ஒரு சாதாரண நிலை என்பதைக் கூற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தெரிவித்துள்ளார்.

நாம் புதிதாக நிறுவிய சர்வதேச வர்த்தக அலுவலகம் (Office of International Trade) தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் பிரவேசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. வரியின்றி ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், போர்ட்சிட்டி திட்டத்தின் 80% கட்டுமானப் பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன. தற்போது அதற்கு குடிநீர் மற்றும் மின்சார விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் வர்த்தக நடவடிக்கைகளை தொடங்குவதற்கு வர்த்தக மூலோபாய முக்கியத்துவம் சட்டத்தின் கீழ் (Business strategic Importance) அனுமதி பெற வேண்டும்.

அதற்கு, விண்ணப்பதாரர்கள் தங்கள் திட்ட அறிக்கையை போர்ட்சிட்டி ஆணகைகுழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை, நாங்கள் இருபதுக்கும் மேற்பட்ட BSI களை அமைச்சரவைக்கு வழங்கியுள்ளோம். சுமார் ஐம்பது BSI அமைச்சரவைக்கு வழங்கப்பட உள்ளன என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »