தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் ஒன்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரகால பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்.